'கடாரம் கொண்டான்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்த்து வரும் படம் 'கோப்ரா', இது விக்ரமின் 58-வது படமாகும். 'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vikram _0.jpg)
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் 18 வியாகாம் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப்படத்தைத் தயாரிக்கஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப் படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விக்ரமின் பிறந்தநாளானா நேற்று, அதைக் கொண்டாடும் வகையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர், இயக்குனர் அஜய் ஞானமுத்து, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்ட கோப்ரா பட டீம் வாழத்துகள் தெரிவித்தனர்.
இதேபோலகடந்த 2018-ஆம் ஆண்டு விக்ரம்நடிப்பில்தொடங்கப்பட்ட கர்ணன் படத்தில் விக்ரமின் லுக்கைஅந்தப் படத்தின்இயக்குனர் விமல் வெளியிட்டுள்ளார். 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும்இந்தப் படம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
Follow Us