பிரபல பாலிவுட் நடிகைகளானகரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய இருவரும் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெருங்கிய நண்பர்களான இவர்கள்கரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மும்பையில் பல பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் கரண் ஜோகர் வீட்டில் நடந்த ரீயூனியன் பார்ட்டியில்கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகைகள் மலைக்க அரோரா, ஆலியா பட், கரிஷ்மாகபூர், நடிகர்கள் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பலரும் பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில்கரீனா கபூர் மற்றும் அமிர்தா அரோரா ஆகிய இருவருக்கும் தற்போது கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்துஇவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும்பரிசோதனைக்கு உட்படுத்த மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவிட்டுள்ளது.