dhanush

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம், ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்டா வரச் சொல்லுங்க', 'பண்டாரத்தி புராணம்', 'திரௌபதையின் முத்தம்' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கர்ணன் படத்தின் டீசர் மார்ச் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்தகவலை நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உற்சாகமான ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment