Skip to main content

தலைப்பு திருட்டு சர்ச்சையில் கரண் ஜோஹர் விளக்கம்...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

karan johar

 

 

பாலிவுட்டை சேர்ந்த இயக்குனர் மதுர் பண்டார்கர், ‘பாலிவுட் வைவ்ஸ்’ என்ற தலைப்பை தனது அடுத்த படத்திற்காக பதிவு செய்துள்ளார். ஆனால், கரண் ஜோஹர் நெட்ஃப்ளிக்ஸில் உருவாகும் நிகழ்ச்சி ஒன்றிற்கு இதை தலைப்பாக வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

இது தொடர்பாக கடந்த வாரமே மதுர் பண்டார்கர், கரண் ஜோஹரைச் சாடிப் பதிவிட்டிருந்தார். இந்தத் தலைப்பை கரண் ஜோஹர் தன்னிடம் கேட்டதாகவும், தானும், தயாரிப்பாளர் சங்கமும் ஏற்கனவே அதை மறுத்துவிட்டதாகவும், எனவே இந்தத் தலைப்பை லேசாக மாற்றிப் பயன்படுத்துவதெல்லாம் எந்த அடிப்படையில் பார்த்தாலும் தவறு என்று பண்டார்கர் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி இயக்குனர்கள் சங்கம், மேற்கிந்தியத் திரை ஊழியர்கள் கூட்டமைப்பு எனப் பல அமைப்புகள் மூலமாக முறையாக நோட்டீஸும் அனுப்பியுள்ளார். ஆனால், கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்‌ஷன்ஸ் இதற்கு பதிலளிக்கவில்லை.

 

இன்று இந்த நிகழ்ச்சி வெளியாகவிருக்கும் நிலையில் கரண் ஜோஹர், பண்டார்கருக்குக் கடிதம் ஒன்றை எழுதி தனது சமூக வலைதளத்தில் நேற்று பகிர்ந்துள்ளார்.

 

"நமக்குள் நீண்ட காலமாக நட்பு இருந்து வருகிறது. பல வருடங்களாக இந்தத் துறையில் இருவரும் இருந்து வருகிறோம். உங்கள் படைப்புகளின் தீவிரமான ரசிகன் நான். என்றுமே உங்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என விரும்பியிருக்கிறேன்.

 

நீங்கள் எங்கள் மீது வருத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். கடந்த சில வாரங்களாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையை உருவாக்கியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதேநேரம் நாங்கள் புதிதாக, வித்தியாசமான ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

 

இது உண்மை மனிதர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதால் 'தி ஃபேபுலஸ் லைவ்ஸ் ஆஃப் பாலிவுட் வைவ்ஸ்' (The Fabulous Lives of Bollywood Wives) என்கிற தலைப்பை தெர்ந்தெடுத்திருக்கிறோம். எங்கள் தலைப்பு தனித்துவமாக இருப்பதால், இதற்கு முன் இந்தத் தலைப்பால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த வருத்தம் இப்போது இருக்காது என நினைக்கிறேன்.

 

மேலும், எங்கள் சீரிஸை 'ஃபேபுலஸ் லைவ்ஸ்' என்கிற ஹேஷ்டேகின் கீழ்தான் அனைத்து சமூக வலைதளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறோம். இந்தப் பெயரை வைத்துதான் இந்தத் தொடர் வரிசையை உருவாக்கவிருக்கிறோம். எங்கள் சீரிஸின் தன்மை, ரசிகர்கள் என அனைத்தும் வித்தியாசமானவை. அது உங்களது படைப்புக்கு இடையூறாக இருக்காது என்று உறுதியுடன் கூறுகிறோம்.

 

நாம் இந்தப் பிரச்சினையைக் கடந்து வந்து ரசிகர்களுக்காகத் தொடர்ந்து சிறப்பான படைப்புகளைத் தருவோம் என்று நம்புகிறேன். உங்கள் அத்தனை முயற்சிகளுக்கும் என் வாழ்த்துகள். உங்கள் படைப்பைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்" என்று கரண் ஜோஹர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" - டாப்ஸி மறைமுக தாக்கு

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

Taapsee Pannu talks about Karan Johar’s show

 

தமிழ் , தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் டாப்ஸி. அந்த வகையில் தமிழில் ஜெயம் ரவியின் 'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'டோபரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டாப்ஸி.

 

ad

 

அதில் ஒரு பகுதியாக ஒரு நிகழ்ச்சியில் டாப்ஸியிடம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி, "அந்த நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை" எனப் பதிலளித்துள்ளார். டாப்ஸியின் இந்த பதில் தற்போது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சியில், பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் டாப்ஸி இதுவரை கலந்துகொள்ளவில்லை. மேலும் அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் அவர்களது பாலியல் வாழ்க்கை குறித்து எப்போதும் கரண் ஜோகர் கேள்வி எழுப்புவது வழக்கம். அவரது கேள்வி பாலிவுட்டில் பலமுறை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

“அந்த பார்ட்டிக்கும் இதுக்கும் தொடர்பில்லை”- என்சிபி அதிகாரி 

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
karam johar

 

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. போதைப் பொருட்களைப் பல பிரபலங்கள் பயன்படுத்துவதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல பிரபலங்களை என்சிபி அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் போதைப் பொருட்களை ஊக்குவிப்பதாக சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னதாக கரண் ஜோஹர் நடத்திய விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நடிகையர்கள் போதையில் தள்ளாடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலானது. அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருவதால், பலரும் கரண் ஜோஹரையும் என்சிபி அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து கரண் ஜோஹர் கூறுகையில், “கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சில ஊடகங்களின் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

அது முற்றிலும் தவறான தகவல் என்று கடந்த ஆண்டே நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். தற்போது இவை மீண்டும் தவறான முறையில் பரப்பப்படுவதால் இதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

 

எந்த ஒரு போதை வஸ்துக்களும் அந்த பார்ட்டியின் போது பயன்படுத்தப்பட வில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.

 

என்னையும், என் குடும்பத்தையும், என் தயாரிப்பு நிறுவனத்தைக் களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான செய்திகளும், வீடியோக்களும் பரப்பப்படுகின்றன.

 

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்பத் தொடங்கியிருக்கின்றன. ஊடகத்தில் இருப்பவர்கள் இதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் இந்த அடிப்படையற்ற தாக்குதல்களுக்கு எதிராக நான் எனது உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சட்டத்தை நாட வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டி வீடியோவுக்கும், போதைப் பொருள் வழக்குக்கும் தொடர்பில்லை என்று என்சிபி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

நேற்று (27.09.20) நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய என்சிபி தென்மேற்கு பிராந்திய துணை இயக்குநர் ஜெனரல் எம்.ஏ ஜெயின், ''கரண் ஜோஹர் வீட்டில் நடந்த பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோவுக்கும் தற்போது நடந்து கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கும் தொடர்பில்லை'' என்றார்.