இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தர்மா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் கரண் ஜோஹர். இவரை ஓரினச் சேர்க்கையாளர் என்று ட்விட்டரில் கிண்டலடித்தவருக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

KAran johar

இவர் தொடக்கத்தில் இயக்குனராக பாலிவுட்டில் வலம் வந்தார். அதன்பின் தன்னுடைய குடும்ப தொழிலான படங்கள் தயாரிப்பதையும் சேர்த்து கவனிக்க தொடங்கிவிட்டார். பாகுபலி 2 படத்தை பாலிவுட்டில் வெளியிட்டு மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தார்.

Advertisment

2017-ல் தனது வாழ்க்கைக் கதையை புத்தகமாக வெளியிட்ட கரண் ஜோஹர், அதில் தான் ஒரு தன் பாலின உறவாளர் தான் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் திரைப்பட விமர்சகர் ராஜிவ் மன்சத் கரண் ஜோஹரை சந்தித்தது குறித்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் ஒரு ட்விட்டர் ஃபாலோவர் சம்மந்தமே இல்லாமல் கரண் ஜோஹரை பற்றி ‘கரண் ஜோஹர் பற்றிப் படம் எடுத்தால் அந்தப் படத்துக்கு கரண் ஜோஹார்: தி கே (the gay) என்று பெயர் வைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இதற்கு பதிலடி கொடுத்த கரண், “உண்மையாக யோசிக்கும் அறிவுஜீவி நீங்கள். இத்தனை நாளா எங்கு மறைந்திருந்தீர்கள்? நீங்கள் உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு நன்றி. ட்விட்டரில் இன்று மிகவும் ஆக்கத்திறனுடைய குரலாக மாறியதற்கு நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.