Advertisment

போதை பொருள் விவகாரம்: பிரபல தயாரிப்பாளர் மறுப்பு! 

karan johar

Advertisment

சுசாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் உருவாகி வருகிறது. போதை பொருட்களை பல பிரபலங்கள் பயன்படுத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் பல பிரபலங்களை என்சிபி அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் போதை பொருட்களை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து கரண் ஜோஹர் கூறுகையில், “கடந்த ஆண்டு என் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சில ஊடகங்களின் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

அது முற்றிலும் தவறான தகவல் என்று கடந்த ஆண்டே நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். தற்போது இவை மீண்டும் தவறான முறையில் பரப்பப்படுவதால் இதை மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

Advertisment

எந்த ஒரு போதை வஸ்துக்களும் அந்த பார்ட்டியின் போது பயன்படுத்தப்பட வில்லை. போதைப் பொருட்களை நான் பயன்படுத்துவதுமில்லை, அவற்றை ஊக்குவிப்பதுமில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி மீண்டும் தெளிவுப்படுத்துகிறேன்.

என்னையும், என் குடும்பத்தையும், என் தயாரிப்பு நிறுவனத்தை களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான செய்திகளும், வீடியோக்களும் பரப்பப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னைப் பற்றிய தவறான செய்திகளை பரப்பத் தொடங்கியிருக்கின்றன. ஊடகத்தில் இருப்பவர்கள் இதை நிறுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் இந்த அடிப்படையற்ற தாக்குதல்களுக்கு எதிராக நான் எனது உரிமையை பாதுகாத்துக் கொள்ள சட்டத்தை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

karan johar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe