Advertisment

கடும்போட்டியை உருவாக்கிய மலையாளப் படம்!

kappela

முகம்மது முஸ்தபா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் 'கப்பேலா'. இப்படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்திவ்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் இப்படம் சரியாக ஓடவில்லை.

Advertisment

அண்மையில் நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு சாதாரண கதையைத் திரைக்கதையின் மூலம் எவ்வளவு விறுவிறுப்பாகவும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கவும் முடியும் என்பதை இப்படம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisment

பாலிவுட்டின் பிரபல இயக்குனரான அனுராஜ் காஷ்யப் இப்படத்தைப் பார்த்து வியந்து ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி உண்டானது. தற்போது இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதில் யாரை நடிக்க வைப்பது, இயக்க வைப்பது உள்ளிட்ட பணிகளைக் கவனிக்கவுள்ளனர்.

முன்னதாக, மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

roshan tollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe