காப்பான் ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பு...

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் காப்பான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் இணைந்து பணி புரிகின்றனர்.

surya

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து சிறுக்கி என்றொரு பாடல் வெளியான நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்றுநாளை காலை 11 மணிக்கு அறிவிக்க இருப்பதாகபடக்குழு அறிவித்துள்ளது.

Surya
இதையும் படியுங்கள்
Subscribe