kapil dev meets rajinikanth

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

Advertisment

சமீபத்தில் ரஜினிகாந்தை இந்திய அணி கிரிக்கெட் வீரர்களானகுல்தீப் யாதவ், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் ரஜினியை சந்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "இது போன்ற பெரிய மனிதருடன் இருப்பது ஒரு மரியாதை மற்றும் பாக்கியமாகக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

கபில் தேவ் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது உலக கோப்பை வென்றது '83' என்ற தலைப்பில் 2021ஆம் ஆண்டு படமாகவெளியானது. அப்போது படக்குழுவினரை பாராட்டிய ரஜினி கபில் தேவையும் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.