kantara ott release update clarifired by producer karthik gowda

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு அண்மையில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் எனப் பாராட்டியிருந்தார்.

Advertisment

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி பரவி வந்தன. இந்நிலையில் படக்குழு இது தவறான செய்தி என்றும் யாரும் இதை நம்ப வேண்டாம் என இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா விளக்கமளித்து உள்ளர். மேலும் இது தவறான செய்தி. விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவிப்போம். ஆனால் நிச்சயம் நவம்பர் 4ஆம் தேதி இல்லை என்றும் கூறியுள்ளார்.