'காந்தாரா' ஓடிடி ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

kantara ott release date announced

'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.

திரை பிரபலங்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ரஜினிகாந்த் தற்போது ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் 'காந்தாரா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை (24.11.2022) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை அமேசான் நிறுவனம் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இப்படம் தற்போது வரை 400 கோடி வசூலைக்கடந்து சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

amazon prime
இதையும் படியுங்கள்
Subscribe