kantara movie tamil release soon

'கே.ஜி.எஃப்' படங்களைதயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ்நிறுவனத்தின் தயாரிப்பில் ரிசப் ஷெட்டிஇயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் 'காந்தாரா'. சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும், இப்படத்தில் கிஷோர், மூத்த கன்னட நடிகர் அச்யுத் குமார், பிரமோத் ஷெட்டி சப்தமி கவுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 30 ஆம் தேதி கன்னட மொழியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வசூலையும் வாரிகுவித்து வருகிறது.

Advertisment

கன்னட மொழியில் வெளியான இப்படத்திற்கு, கிடைத்து வரும் பெரும் வரவேற்பை தொடர்ந்து, படக்குழு பிற மொழியில்வெளியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் படக்குழு, 'காந்தாரா' படத்தின் தமிழ் பதிப்பு அதே பெயரில் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதேபோன்று'காந்தாரா' படம் தெலுங்கு, மலையாளம், இந்தி, என பிற மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கன்னட சினிமாவில் இருந்து, 'கே.ஜி.எஃப்' படங்களுக்கு பிறகு, இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக 'காந்தாரா' படம் மாறியுள்ளது.