ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக, அதாவது படத்தின் முன் கதையை மையப்படுத்தி உருவாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்த நிலையில் தொடர் விபத்துகளை சந்தித்தது.
இப்படத்தில் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. இதுவரை ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா உள்ளிட்டோர் நடித்துள்ளதாக அவர்களின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இப்படம் சிக்கலை சந்தித்து வருகிறது. முதலில் அங்கு இப்படம் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் வெளியீட்டு பங்கு தொகையில் இழுபறி நீடித்து வருவதால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றும் இத்தகவல் தான் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்தது.
கேரளாவில் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனமான ‘பிரித்விராஜ் புரொடக்ஷன்’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கிறது. அவர்கள் வழக்கமாக இருக்கும் 50 சதவித பங்கை விட 5 சதவிதம் அதிகம் கேடுள்ளார்கள். இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அது சுமுகமாக் முடியவில்லை. இதனால், இப்படம் படக்குழு அறிவித்த தேதியில் வெளியாகும என்ற நிலை உருவாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/12/312-2025-09-12-15-01-04.jpg)