Advertisment

காந்தாரா 2-வில் ருக்மிணி வசந்த்

124

ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.

Advertisment

இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் ப்ரீக்குவலாக, அதாவது படத்தின் முன் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் போஸ்டர் முன்னதாக வெளியானது. கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட ஏழு மொழிகளில் இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்த நிலையில் தொடர் விபத்துகளை சந்தித்து ஒரு வழியாக சமீபத்தில் முடிந்தது. இந்த நிலையில் படத்தில் ருக்மிணி வசந்த் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவரின் கதாபாத்திர போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர்  ‘கனகவதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Kantara 2 Rishab shetty Rukmini Vasanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe