/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1320_0.jpg)
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழிலும் கணிசமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திலும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் 'ஹே சினமிகா' ஆகிய இரு படங்களில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான் தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சீதா ராமம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் 'கண்ணுக்குள்ளே...' என்ற மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் பாடலாக வெளியாகியுள்ள இப்பாடலை மதன் கார்க்கி வரிகளில் ஹரிஹரன், சிந்துரி ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். நேற்று வெளியான இந்த பாடல் யூடியூபில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)