/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kanne kalaimane_0.jpg)
'தென்மேற்கு பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் வெளி வந்த படங்கள் பல விருதுகளையும் வென்றிருக்கின்றன. இவர் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்படப் பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.
'கண்ணே கலைமானே' திரைப்படம் மும்பையில் நடந்த தாதா சாகேப் சர்வதேசத்திரைப்பட விழாவுக்கும் கொல்கத்தா சர்வதேசத்திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றிருந்தது.
இந்நிலையில் இப்படமானதுமேலும் மூன்று விருதுகளை பிரெஞ்ச் சர்வதேசத்திரைப்பட விழாவில் வாங்கிஇருக்கிறது. சிறந்த துணைநடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நடிகை தமன்னாவிற்கும் கிடைத்துள்ளது. விருது பெற்ற படைப்பாளிகளுக்கு சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)