kannan

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ஆர். கண்ணன் பேசும்போது....

Advertisment

Advertisment

"ஒரு படம் நினைத்த மாதிரி வரணும்னா அதற்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. அதர்வா அந்த வகையில் படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தார். அடுத்த படத்திலும் நாங்கள் இணைகிறோம். எப்ரல் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். இந்த படம் இந்த அளவுக்கு வர முக்கிய காரணமாக இருந்த பங்கஜ் மேத்தா, அன்புச்செழியன், ராம் பிரசாத் ஆகியோருக்கு நன்றி. படத்தை நல்ல தேதியில் வெளியிட எனக்கு ஆதரவாக இருக்கும் ட்ரைடெண்ட்ஸ் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சாருக்கு நன்றி. இவன் தந்திரன் படத்துக்கு பிறகு இது எனக்கு முக்கியமான படம். அந்த படம் நன்றாக ஓடினாலும், ஒரு சில காரணங்களால் நாங்கள் எதிர்பார்த்த வரவு இல்லை. ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்கள் என்றுமே கைவிட்டதில்லை. இந்த படத்தையும் ரசிகர்கள் வெற்றிப்படமாக மாற்றுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.