dhanush divya

கடந்த ஆண்டு இறுதியில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் மாரி-2 படம் வெளியானது. அந்த வாரத்தில் வெளியான ஐந்து படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வந்த ரௌடி பேபி பாடல், படம் வெளியாகுவதற்கு முன்பே செம ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து படம் வெளியான அடுத்த இரண்டு வாரங்களில் இந்த பாடலின் வீடியோ சாங் யூ-ட்யூபில் வெளியிடப்பட்டது. வெளியாகிய இரண்டு வாரத்தில் சரசரவென 100 மில்லியன் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். இதனால் இந்த பாடல் பல பிரபலங்களிடம் கவனம் பெற்று வருகிறது.

தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் ஜோடியாக நடித்த திவ்யா ஸ்பந்தனா, தற்போது இந்த பாடல் 100 மில்லியன் தொட்டிருப்பதற்கு தனுஷிற்கும், யுவனுக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு கன்னடர்கள் மத்தியில் சிக்கிக்கொண்டுள்ளார். கன்னடர்கள் பலர், தமிழ் பாடல் ஒன்றிற்கு வாழ்த்து தெரிவிக்க தெரிந்த உங்களுக்கு ஏன் கேஜிஎஃப் படத்திற்காக ஒரு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. நீங்கள் இவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதால் தமிழர்களிடம் இருந்தே ஓட்டை வாங்கிக்கொள்ளுங்கள் கன்னடர்கள் யாரும் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் குத்து ரம்யா என வளம் வந்தவர், சொந்த ஊருக்கு சென்றதும் தன்னுடைய பழைய பெயரான திவ்யா ஸ்பந்தனாவை வைத்துகொண்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment