பிரபல கன்னட டிவி நடிகை ஷோபா, மகளு ஜானகி என்ற டிவி நாடகம் மூலம் கன்னட ரசிகர்களிடம் புகழ் பெற்றவர். மேலும் பல டிவி தொடர்களில் நடித்துள்ளார். பாகல் கோட் மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற கோவில் பன்சங்கரி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றார். அவரை சேர்த்து அந்த காரில் எட்டு பேர் இருந்தனர்.

Advertisment

car accident

சித்ரதுர்கா என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு லாரியின் மீது மோதியது. இதில் காரில் இருந்த ஷோபா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருக்கு வயது 45. காரில் இருந்த அசோக், ஷியாமளா, சுகன்யா, மஞ்சுளா ஆகிய மேலும் 4 பேரும் அதே இடத்தில் பலியானார்கள்.

Advertisment

மீதம் உள்ளவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் டயர் பஞ்சர் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஷோபா மறைவுக்கு கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.