இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் விடுமுறையில் வெளியான அஜித் படம் விஸ்வாசம். குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் செம ஹிட் அடித்தது.

Advertisment

viswasam

சிவா இயக்கிய இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா, கலைராணி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

குடும்பங்கள் கொண்டாடிய இந்த படம் , தமிழகத்தில் 100 நாட்கள் கடந்து ஓடியது. தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என எல்லாத் தரப்பினருக்கும் லாபம் தரக்கூடிய படமாக இது அமைந்தது. விஸ்வாசம் படத்தை தெலுங்கில் விஸ்வாசம் என்றும், கன்னடத்தில் ஜெகமல்லா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

Advertisment

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="3f75f8db-6149-4b89-8847-eadd2ae791ce" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_2.png" />

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கப்போவதில்லை, அவருக்கு பதிலாக வேறொருவர் இந்த ரீமேக் படத்தை இயக்கப்போகிறாராம்.