Kannada short film Sunflowers Were the First Ones to Know qualifies for Oscars 2025

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவிற்காக இந்தியா சார்பில் ‘லப்பட்டா லேடிஸ்’ என்ற பாலிவுட் படம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டு ஆஸ்கருக்கு கன்னட குறும்படம் ‘Sunflowers Were the First Ones to Know’ லைவ் ஆக்‌ஷன் குறும்படம் என்ற பிரிவில் தகுதி பெற்றுள்ளது. இதனை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் மாணவர் சித்தானந்தா எஸ் நாயக் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். 15 நிமிடம் ஓடக்கூடிய இந்தப் படம் இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் மரபுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Kannada short film Sunflowers Were the First Ones to Know qualifies for Oscars 2025

Advertisment

இந்தப் படம் இந்தாண்டு நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பெங்களூரு சர்வதேச குறும்பட விழாவில் விருது வென்றது. 2025ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. விரைவில் இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை அறிவிப்பார்கள். இந்த சூழலில் போட்டியில் உள்ளே நுழைந்த கன்னட குறும்படத்துக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற இந்தியப் படம் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.