/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/143_36.jpg)
கன்னட நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்ட்டின். வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரித்து வருகின்றனர். கதை, திரைக்கதை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். மணி ஷர்மா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க ரவி பஸ்ரூர் பின்னணி இசையயைக் கவனிக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. 11 அக்டோபர் 2024 அன்று பல மொழிகளில் ஒரே நேரத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து தயாரிப்பாளர் உதய் கே மேத்தா கூறுகையில், “மார்ட்டின் ஒரு திரைப்படம் மட்டுமல்ல, இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் வென்ச்சரை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம், அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆக்ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் 36வது பிறந்தநாளை முன்னிட்டு, 11 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் ஒரே நேரத்தில் 'மார்ட்டின்' திரைப்படத்தை வெளியிடவுள்ளோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)