
கரோனா லாக்டவுனால் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வந்த அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங் முடங்கியுள்ளது. அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்த பிற்பாடே இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால் அதற்கு முன்னதாக வேறொரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரபல கன்னட படம் மாயாபஜார் படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்க சுந்தர்.சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால், விரைவில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது.
இந்த படத்தை சுந்தர்.சி இன் நண்பரும், இயக்குனருமான பத்ரி இயக்கவுள்ளார். பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற 'மாயாபஜார்' படத்தின் ரீமேக் ஆகும். ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் வெளியான இந்த படம் க்ரைம் காமெடி வகையாகும்.