Advertisment

பாய்காட் ராஷ்மிகா...சிக்கலில் ராஷ்மிகா... இனி கன்னடத்தில் நடிப்பாரா?

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா நடிப்பில் டியர் காம்ரேட் படம் நேற்று நான்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸிற்காக நான்கு மாநிலங்களிலும் இசை நிகழ்ச்சி நடத்தி புரோமோஷன் செய்யப்பட்டது.

Advertisment

rashmika

நடிகை ராஷ்மிகா தெலுங்கில் நடித்து வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுகு, தமிழ் உள்ளிட்ட மாநிலங்களில் பிரபலமாகினார். சிலருக்கு இவர் நடித்த கன்னட படமான கிரிக் பார்ட்டியிலேயே மிகவும் பிரபலமடைந்தார். தற்போது தமிழ், கன்னடா, தெலுகு என மூன்று மொழி படங்களிலும் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் டியர் காம்ரேட் படத்திற்காக நடைபெற்ற புரோமோஷனில் உங்களுக்கு எந்த மொழி படத்தில் நடிப்பது சிரமம் என்று கேட்டபோது கன்னடத்தில் நடிப்பதுதான் சிரமம் என்று பதிலளித்தார். தற்போது இது மிகப்பெரிய பிரச்சனையாக கன்னட அமைப்புகளிடம் மாறியிருக்கிறது.

Advertisment

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஷ்மிகா கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர். இந்நிலையில் கன்னடம் தனக்கு கஷ்டம் என்று அவர் கூறியதை கேட்ட கன்னட அமைப்புகள் ராஷ்மிகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னடம் பேசுவது கஷ்டம் எனக் கூறுவதா? மற்ற மொழிகளில் பிரபலம் அடைய தனது மொழியை புறம் தள்ளுவதா என்று கொந்தளித்துள்ளனர். இதனால் கன்னடர்கள் ட்விட்டரில் பாய்காட் டியர் காம்ரேட் என்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ராஷ்மிகாவுக்கும் அவரது படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

rashmika mandana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe