கன்னட சினிமாவில் துணை நடிகையாக இருந்த விஜயலட்சுமி, துங்கபத்ரா படத்தில் நடித்துள்ளார். அப்போது அந்த படத்தின் இயக்குனர் ஆஞ்சநேயாவுடன் நெருக்கம் ஏற்பட, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. விஜயலட்சுமி வீட்டில் அவருடைய காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவர் விடாப்பிடியாக இருந்துள்ளதால் போலீஸில் இயக்குனர் அஞ்சநேயா தங்களின் மகளை காசிற்காக கடத்திவிட்டதாக கூறியுள்ளனர்.

director heroine

Advertisment

ஆனால், விஜயலட்சுமி வீட்டைவிட்டு வெளியேறி ஆஞ்சநேயாவுடன் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துக்கொண்டார். இதனையடுத்து கர்நாடகாவிலுள்ள ராய்ச்சூர் மாவட்ட சூப்பிரண்டை சந்தித்த இந்த தம்பதி புகார் அளித்துள்ளனர். அதில், தன்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கும் தனது கணவர் ஆஞ்சநேயா குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரினார்.

Advertisment

அதேபோல விஜயலட்சுமி மற்றும் ஆஞ்சநேயா குறித்து விஜயலட்சுமி பெற்றோர் அளித்த புகாரை மறுப்பு தெரிவிக்கும் விதமாக தான் வீட்டில் இருந்த பணம் எதுவும் எடுத்துவரவில்லை. என்னுடைய பெற்றோர் என்னை உடல் ரீதியாக தாக்கி, என்னை கொலை செய்ய திட்டமிட்டனர் என்று விஜயலட்சுமி விளக்கமளித்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி - ஆஞ்சநேயா தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

the newstuff ad

இதனிடையே விஜயலட்சுமியின் தாயார் மற்றும் அவரது பாட்டி ஆஞ்சநேயா குடும்பத்தினர் மீது மாண்டியா மாவட்ட காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதில், ஆஞ்சநேயா மற்றும் அவரது குடும்பத்தினரால் விஜயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.