/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/256_17.jpg)
கன்னட திரையுலகில் நடிகராக வலம் வரும் சூரஜ் குமார், 'ரத்தம்' என்ற கன்னட படத்தில் நடித்து வந்தார். மேலும் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இன்னும் பெயரிடாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் நெருங்கிய உறவினரும், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாஸின் மகனும் ஆவார்.
24 வயதான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து உதகைக்கு சென்றுள்ளார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ட்ராக்டர்ஒன்றை முந்தி செல்ல முயன்றபோது வாகனம் கட்டுபாட்டை இழந்துள்ளது. பின்பு எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார்மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அவரது வலது கால் பலத்த சேதமடைந்த நிலையில் முழங்காலின் கீழ் பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)