தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை சிவராஜ்குமார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், "நான் தனுஷின் தீவிர ரசிகன். அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். உண்மையில்தனுஷின் நடிப்பில் என்னைப் பார்க்கிறேன். அது போகஅவரின் செயல்பாடுகள்மக்களிடம் அவர் பழகும் விதம்,அதனைப் பார்க்கும் போது என்னைப் போன்றே தெரிகிறது.
தனுஷ் மீது எனக்கு தனி விருப்பம் உண்டு. அதனால் அவருடன் இணைந்து நடிக்கஇந்த வாய்ப்புவந்த போது அதனைத்தவறவிடவிரும்பவில்லை. இயக்குநர் அருண் மாதேஸ்வரன், என்னிடம் 40 நிமிடங்கள் முழுக் கதையையும் கூறினார். அவர் கதை கூறிய விதம் மிகவும் பிடித்திருந்தது. இப்படம் வெளியாகும் போது நிச்சியம் தனுஷுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்" என்று பேசியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சிவராஜ்குமார் நடிப்பில், கன்னடத்தில் வெளியான 'வஜ்ரகாய' படத்தில் தனுஷ் 'நோ ப்ராப்ளம்' என்ற பாடலைப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கேப்டன் மில்லர்' படத்தில் தான் நடிக்கவுள்ளதாக சிவராஜ்குமார் உறுதிசெய்த நிலையில்படக்குழுத்தரப்பு விரைவில் இதனை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.