Advertisment

“மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தர்ஷன்

kannada actor dharshan women organization issue

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தர்ஷன் பேசியுள்ளதாக கவுடாதியர சேனே என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் காதலி என சொல்லப்படும் பவித்ரா கவுடாதொடர்பாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்த நிலையில், அதற்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே அந்த புகார் மனுவில் கவுடாதியர சேனே அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது, “தர்ஷன் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திரையில் எந்தளவிற்கு நல்லவராக இருக்கிறாரோ அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் பகிரங்கமாக பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்தினார். அதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். நடிகர் தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நாங்கள் மகளிர் ஆணையத்தை அணுக முடிவு செய்தோம். இதை அவர் ஏற்கவில்லை என்றால்அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
dharshan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe