அஜித்தின் 'விஸ்வாசம்' பட பாடல் தொட்ட மைல்கல்... கொண்டாடும் ரசிகர்கள்!

viswasam

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் விஸ்வாசம். இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. பட்டிதொட்டியெங்கும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றிபெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்ணான கண்ணே...' என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

alt="ad " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="ff52647c-c536-4a90-8d92-7ec96d765eb9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300.jpg" />

இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட 'கண்ணான கண்ணே...' பாடல் 150 மில்லியன் பார்வைகளை இன்று கடந்தது. இத்தகவல் அறிந்து உற்சாகமான அஜித் ரசிகர்கள், இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Subscribe