kanimozhi mp advice vijay regards politics

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் விஜய். படங்களைப் பொறுத்தவரை வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை அடுத்து ஒரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்த அவர், கட்சியின் முதல் மாநாட்டை அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சிறிய அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற சுயசக்தி விருது வழங்கும் விழாவில் அவருக்கு விருது கொடுக்கப்பட்டது. அதற்காக அந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

Advertisment

அப்போது அவரிடம், விஜய்க்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள் என்ற ரீதியில், கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிறு வயதிலிருந்தே விஜய் குடும்பத்தினருடன் எனக்கு பழக்கம் இருக்கிறது. இன்று அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார். இந்த இடத்திற்கு அவர் வரத் தெளிவான பார்வை, சரியான புரிதல் இருந்திருக்கிறது. அதே தெளிவோடும் உழைப்போடும் அரசியலிலும் பயணம் செய்ய வேண்டும்” என்றார்.