/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/483_8.jpg)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 38 மொழிகளில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி 3டி முறையில் உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. இவ்விரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடலான ‘ஃபயர் சாங்...’ வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி ட்ரைலர் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்து, புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது. சூர்யாவிற்கு எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து கடந்த ஆண்டு எந்த படமும் வெளியாகவில்லை. இடையில் விக்ரம், ராக்கெட்ரி உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா ஹீரோவாக நடிக்கும் கங்குவா படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)