Advertisment

‘தடுக்கு விழுந்த இடத்தில் தங்க புதையல் எடுக்கலாம்’ - புது கெட்டப்பில் சூர்யா

kanguva second single yolo released

சூர்யா கடைசியாக ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்திற்கு பிறகு கமலின் ‘விக்ரம்’, மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’, சூரரைப் போற்று இந்தி ரீமேக்கான அக்‌ஷய் குமாரின் ‘சர்ஃபிரா’ உள்ளிட்ட படங்களில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்போது ஹீரோவாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து கார்த்திக் சுப்புராக் இயக்கத்தில் இன்னும் பெயரிடாத ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

இதில் கங்குவா படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடித்து வர பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’ பாடல் உள்ளிடவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ‘யோலோ’ லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் சூர்யாவும் திஷா பதானியும் ஜாலியாக காதலிப்பதை இந்த பாடல் விவரிக்கிறது. மேலும் சூர்யா இதில் புது கெட்டப்பில் இருக்கிறார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

actor suriya Kanguva siruthai siva
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe