kanguva release banned case

பியூயல் டெக்னாலஜிஸ்(Fuel Technologies) என்ற நிறுவனம் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட மூன்று படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கியிருந்தது. இதில் இரண்டு படங்கள் தயாரிக்காததால் 5 கோடி ரூபாயை பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. இதையடுத்து மீதமுள்ள 1 கோடியே 60 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும், அதுவரை கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Advertisment

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நாளை மறுதினம் கங்குவா படம் வெளியாகவிருக்கும் சூழலில் வழக்கு தொடர்ந்திருப்பது படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நெருக்கடியாகவும் இருப்பதால் படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிமன்றம், பியூயல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள தொகையை சென்னை உயர்நீதி மன்றம் தலைமை பதிவாளரிடம் டெப்பாசிட் செய்து விட்டு படத்தை வெளியிடலாம் எனக் கூறி டெப்பாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ஏற்கனவே மற்றொரு வழக்கில் ரூ.20 கோடியை வரும் 13ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.