kanguva movie editor nishadh yusuf passed away

மலையாளத்தில் உண்டா, ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா, சாவேர் என பல்வேறு படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் நிஷாத் யூசுஃப். ‘தள்ளுமாலா’ படத்துக்காக கேரள அரசின் சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை வென்றார். தமிழில் சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவிருக்கும் கங்குவா படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் கொச்சி பனம்பில்லி நகரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மரணத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kanguva movie editor nishadh yusuf passed away

Advertisment

நிஷாத் யூசுஃபின் திடீர் மறைவு கேரள மற்றும் தமிழ்நாடு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.