kangana said she missef to direct irfan khan

கங்கனா ரனாவத் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'எமர்ஜென்சி'. இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில், அவர் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு கங்கான ரனாவத், தலைவி படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

Advertisment

இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகும் என வீடியோ வெளியிட்டுப் படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தது. அதே சமயத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாஜ.க சார்பில் கங்கனா ரனாவத் ஹிமாச்சல பிரதேச மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கங்கனா கலந்து கொண்டு பேசியதாவது, “ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான் ஆகிய மூன்று பேரையும் வைத்து, ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசை. அவர்களின் திறமையான பக்கத்தைக் காட்ட விரும்புகிறேன். அவர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் திரைத்துறைக்கு நிறைய வருமானம் வசூலித்துக் கொடுக்கிறார்கள். அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் எனக்குப் பிடித்த நடிகர் இர்ஃபான் கான். அவரை இயக்க முடியாமல் போனது வருத்தம்தான். அவரை நான் மிஸ் செய்கிறேன்” என்றார்.