/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/68_31.jpg)
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது'சந்திரமுகி 2' படம். இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு மற்றும் ராதிகா நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கங்கனா ரணாவத்,தனது காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று சந்திரமுகி படத்தில் எனது கதாபாத்திரத்தின் பணிகள் முடியவுள்ளன. அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். அழகான படக்குழுவினருடன் பயணித்தேன். அவர்களுக்கு குட் பை சொல்லகஷ்டமாக இருக்கிறது" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகவா லாரன்ஸுடன் பணிபுரிந்தது குறித்தும் அவரது வளர்ச்சி குறித்தும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
ராகவா லாரன்ஸுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமான கங்கனா கடைசியாக தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)