kangana reacts for Meghalaya Honeymoon case

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி- சோனம் ஆகியோருக்கு கடந்த மே 11ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக கடந்த மே 20ஆம் தேதி மேகாலயாவுக்குச் சென்ற இவர்கள், மே 22ஆம் தேதி திடீரென்று காணாமல் போனார்கள். இது குறித்து அவர்களுடைய குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார் கடந்த ஜூன் 2ஆம் தேதி, ஒரு பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடலை மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அவரது மனைவி காணவில்லை. அவரை தேடி வந்தனர்.

இதற்கிடையே தம்பதியினரின் குடும்பத்தினர், அவர்கள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டினர். மேலும், இந்த சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சோனமை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. 24 வயதான சோனமுக்கு, கணவர் அல்லாது வேறு ஒரு நபருடன் உறவு இருந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொலையாளிகளை வைத்து சோனம் கணவரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

kangana reacts for Meghalaya Honeymoon case

Advertisment

இந்த சம்பவம் குறித்து தற்போது பா.ஜ.க. எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இது எவ்வளவு அபத்தமானது. ஒரு பெண் தன் பெற்றோருக்கு பயந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது, ஆனால் அந்த பெண் ஒரு கொடூரமான கொலையைத் திட்டமிடலாமா. இதுதான் காலையிலிருந்து என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் எனக்கு தலைவலியே வந்துவிட்டது. அந்த பெண்ணால் விவாகரத்து செய்யவோ அல்லது தன் காதலனுடன் ஓடிப்போகவோ கூட முடியவில்லை. எவ்வளவு கொடூரம்.

ஊமை போன்று இருப்பவர்களை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தான் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலானவர்கள். அவர்களை நாம் அடிக்கடி பார்த்து சிரிக்கிறோம், ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றும் நினைக்கிறோம், ஆனால் அது உண்மை இல்லை. புத்திசாலிகள் தங்கள் சொந்த நலனுக்காக மற்றவர்களைச் சேதப்படுத்துவார்கள். ஆனால் இந்த ஊமை போன்றவர்கள், தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஊமைகளிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.