Advertisment

"உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" - கடுப்பான கங்கனா

 kangana reacts about she acting with vijay sethupathi

Advertisment

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இப்படம் இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d6e484b1-5b20-465c-b7b1-d2ea226354da" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-Website%20%281%29_11.jpg" />

இதனிடையே முன்னாள் விமானப்படை விமானியாக 'தேஜஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த இரண்டு படங்கள் அல்லது தமிழில் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிப்பில் தமிழில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதில் மாதவன் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் பிரபலமாக இருக்கும் இரண்டு பிரபலங்கள் இணைவதாக தெரிவித்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரில் ஹீரோ மற்றும் ஹீரோயின் இருப்பது தெளிவாக இல்லாமல் மறைமுகமாக இருப்பது போல் அமைந்திருந்தது. இதை பார்த்த பலரும் ஹீரோவாக விஜய் சேதுபதியும் ஹீரோயினாக கங்கானாவும் நடிக்கிறார்கள் என பதிவிட்டு வந்தனர். இதே போல் செய்திகளும் வெளியானது.

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு கங்கனா பதிலளித்துள்ளார். அந்த செய்திகளை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்து, "எல்லா நேரங்களிலும் என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் போது, இது போன்ற பயங்கரமான தலைப்புச் செய்திகளுடன், என்னையும் எனது சக நடிகரையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள் வெளியாகி வைரலாகும். உங்களுக்கெல்லாம் நான் சொல்லக்கூடியது ஒன்று தான்" என குறிப்பிட்டு உங்களுக்கான சிறை எங்கே உள்ளது என்ற அர்த்தத்தில் இந்தியில் ஒரு வரி குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், "அதெப்படி எல்லா செய்திகளிலும் ஒரே தலைப்பு இருக்கிறது. இந்த பதிவு உங்களை கஷ்டப்படுத்தியிருந்தால், உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி, தமிழைத்தாண்டி தற்போது இந்தியிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் 'மும்பைக்கார்' படம் கடந்த மாதம் வெளியானது. மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியும் கத்ரீனா கைஃப்-க்கு ஜோடியாக நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

Bollywood Kangana Ranaut katrina kaif actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe