ஆஸ்கர் நிகழ்ச்சிக்கு இணையான நிகழ்ச்சி கான்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி. இந்த ஆண்டுக்கான கான்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கான்ஸ் நகரில் தொடங்கி உள்ளது.25ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் சர்வதேச அளவில் போட்டிக்காக 21 படங்கள் பங்கேற்கின்றன.

Advertisment

kangana ranaut

சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கான்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது இந்த வருடத்திற்கான முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கான்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்தி நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisment

alt="net" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0b6be524-1f30-445a-8a4d-94bcab5793b0" height="135" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_5.png" width="395" />

இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா ரணாவத், காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்து சென்று பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.