ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத் தன் இளமைக்கால வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில்...

Advertisment

gg

''என் 16 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயம் ஒன்றரை ஆண்டுகள் நான் போதை பழக்கத்திற்கு அடிமையாகிருந்தேன். மேலும் அந்த டீனேஜ் வயதில் சில மனிதர்களால் மிகவும் கஷ்டப்பட்டேன். மரணத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்த நேரத்தில் நல்ல நண்பர் ஒருவர் எனக்கு யோகாவை சொல்லிக் கொடுத்தார். கூடவே ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன். போதை பழக்கத்திலிருந்துமீண்டேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மீகம் வழிகாட்டியது'' என்றார்.