Advertisment

"ராமரை போல நீங்களும் அழிக்க முடியாதவர்" - பிரதமர் மோடிக்கு கங்கனா வாழ்த்து 

Kangana Ranaut, wishes pm modi

பிரதமர் மோடி தனது 72 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உலகத்தலைவர்கள், திரை பிரபலங்கள்என பல்வேறு தரப்பினரும், தொலைபேசி மூலமாகவோ, சமூக வலைத்தளம் மூலமாகவோ தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நடிகை கங்கனா பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "சிறு வயதில் ரயில்வே பிளாட்பாரங்களில் டீ விற்றதிலிருந்துஇந்த பூமியின் சக்தி வாய்ந்த மனிதராக மாறியுள்ளது வரைஎன்ன ஒரு அபாரமான பயணம். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ராமரை போல, கிருஷ்ணரை போல, காந்தியைபோல நீங்களும் அளிக்கமுடியாது. உங்களின்பாரம்பரியத்தை எதுவும் அழிக்க முடியாது. அதனால்தான் உங்களை அவதாரம் என்று அழைக்கிறோம். நீங்கள் எங்கள் தலைவராக இருப்பது பாக்கியம்" எனக்குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நடிகை கங்கனா தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kangana Ranaut pm modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe