Kangana Ranaut warns people for trespassers in Mumbai home

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அண்மையில் தனது காட்சிகளில் நடித்து முடிந்துவிட்டதாக கூறி கங்கனா படக்குழுவிடம் இருந்து விடைபெற்றார்.

Advertisment

இதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குசமீபத்தில் சென்றார். அங்கு வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை ஒரு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த கங்கனா ரணாவத், "எனது எல்லா வீடுகளையும் பற்றிய தெளிவான பார்வை எனக்கு உள்ளது. அதனால் அதை நானே செய்வேன். அதற்கு இணையாக எதுவும் இதயத்துடன் நெருங்கியதாக இருக்க முடியாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ அதில் இடம்பெற்ற ஒரு விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வீட்டின் வெளியே இருக்கும் அறிவிப்பு பலகையில், "அத்துமீறுதல் கூடாது. மீறுபவர்கள் சுடப்படுவீர்கள். உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சற்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.