Advertisment

"விஷயங்களை புரிய வைக்க வேறு வழி தேவை" - எச்சரிக்கும் கங்கனா ரணாவத்

kangana ranaut warning some bollywood couples

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார். மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு வரும் கங்கனா தொடர்ந்து மத்திய அரசுக்கும்மோடிக்கும் ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில், சமீபத்தில் அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில்பால்கனியிலும்பார்க்கிங் பகுதியிலும் மொட்டைமாடியில் கூட ஜூம் லென்ஸ்கள் வைத்து ஒரு ஜோடி கண்காணித்து வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisment

இதனையடுத்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள்சந்தேகம் படும்படியான நடவடிக்கைகள் என்னைச் சுற்றி நடக்கவில்லை என்பதைதெரிந்து கொள்ளுங்கள். சொல்வதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்குவிஷயங்களைப் புரிய வைக்க வேறு வழி தேவை. உங்கள் வழியை சரி செய்துகொள்ளுங்கள். இல்லை என்றால் வீடு புகுந்து தாக்குவேன். என்னை பைத்தியம் என்று அழைப்பவர்களுக்கு கூடநான் எந்த அளவிற்குச் செல்வேன் என்பது பற்றி தெரியவில்லை” என எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்டிருந்தார்.

Bollywood Kangana Ranaut
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe