kangana ranaut upset  dhaakad movie response

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி கொள்வார். பாலிவுட் திரையுலகம் ஒரு முனையில் இருந்தால் கங்கனா ரணாவத்அதற்கு எதிராக மறுமுனையில் இருப்பார். இருப்பினும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருக்கும் கங்கனா தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள்பட்டியலில் கங்கனா முதன்மையில் உள்ளார்

Advertisment

பொதுவாக இவர்நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதோடு, தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்கும். ஆனால் கடந்த 20 ஆம் தேதி கங்கனா நடிப்பில் வெளியான'தாகட்' திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை காண திரையரங்கிற்கு ரசிகர்கள் வராத காரணத்தால் வெளியாகி மூன்றேநாளில்படத்தை திரையரங்கில்இருந்து எடுத்துள்ளனர். மேலும் ரூ.100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு 3 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளதால்படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் தன்னுடைய படங்களிலே மோசன வரவேற்பை பெற்ற இப்படம் குறித்து கங்கனா தற்போதுகவலையில் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றனர்.

Advertisment