kangana ranaut talk about the kashmir files film

Advertisment

பிரபல இயக்குநர்விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில்அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 90களில் காஷ்மீரில்இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் மற்றும் உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைகொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின்பு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே கடந்த 11ஆம் தேதி இப்படம் வெளியானது.

மக்களிடையே கலவையான விமர்சனங்களைபெற்றாலும் பாஜக ஆளும்ஹரியானா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இப்படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும்‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப்ரொமோட் செய்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

அந்த வகையில்பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தை ப்ரொமோட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"பாலிவுட் திரையுலகம் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் சுத்தம் செய்துள்ளது. மிகவும் அபத்தமான திரைப்படங்களை உருவாக்கிஅதை விளம்பரம் செய்யும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்ய வேண்டும்.