"இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் அல்ல.." - நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக களமிறங்கிய கங்கனா!

kangana ranaut support nupur sharma prophet muhammad controversy

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின்விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க.வைச் சேர்ந்த நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவரின்இந்த பேச்சுக்கு இந்தியாவைசேர்ந்த பல்வேறு தலைவர்களும்தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நபிகள் குறித்தகருத்துக்கு கத்தார், ஏமான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்ததோடு, அந்தந்த நாட்டிற்கான இந்திய தூதர்களை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நூபுர் சர்மா அவர் கருத்துகளை சொல்ல உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும்நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நீங்களும் அதையே செய்யுங்கள். இதுஆப்கானிஸ்தான் அல்ல. இங்கே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Subscribe