Skip to main content

சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் நடிகைக்கு அனுப்பப்பட்ட சம்மன்!

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
sushant

 

கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் எழுந்தது. நெபோடிஸம் குறித்தும், பாலிவுட்டில் நடைபெறும் அரசியல் குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணம் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோர்தான் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு வைத்தார்.

 

மேலும் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், சஞ்சய் லீலா பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உள்ளிட்டோருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

 

இதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி செய்துள்ளார். அதில், ''இன்னும் ஓரிரண்டு நாட்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில், மகேஷ் பட்டின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்யவுள்ளனர். நடிகை கங்கனாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கரண் ஜோஹருக்கு சம்மன் அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுஷாந்த் சிங் போதை பழக்கத்திற்கு காதலி ரியா உடந்தை - குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Girlfriend Riya complicit in Sushant Singh's drug addiction - charge sheet filed by NCB by

 

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இது தொடர்பான வழக்கில் ரியா சக்ரவர்த்தி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதாகி பின்பு ஒரு மாதம் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக்,சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரிடம் பலமுறை கஞ்சா வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து அவரும் அதனை உட்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை  போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது . 

 

ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு அவரின் காதலி ரியாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.     
 

 

  

Next Story

சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் கார் விபத்தில் பலி

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Sushant Singh's family members killed in car accident

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குக் காரணம், பாலிவுட்டில் நடக்கிற குடும்ப ஆதிக்கமே என்று சமூக ஊடகங்களில் பலரும் குற்றம்சாட்டினர். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

ad

 

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கார் விபத்தில் பலியாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரியாக இருக்கும்  ஓ.பி. சிங்கின் சகோதரி கீதா தேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் அவர்கள் பாட்னாவில் உள்ள வீட்டிற்கு  திரும்பி கொண்டிருந்தனர்.  அப்போது பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ட்ரக் மீது  மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுஷாந்த் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.