Advertisment

இந்திரா காந்தியாக மாறும் கங்கனா; வலுக்கும் எதிர்ப்புகள்

kangana ranaut starring indira gandhi

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாகட்' திரைப்படம் மோசமான வரவேற்பைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி கூட வசூல் செய்யாததால் படக்குழு வருத்தத்தில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் நடிகை கங்கனா அடுத்தாக இந்தியமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளாராம். இப்படத்தை கங்கனாவே இயக்கி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜக ஆதரவாளரான கங்கனா ரணாவத் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திரா காந்தியாக எப்படி நடிப்பது என்றும், அவர் வரலாற்று சம்பவங்களை திரித்து படம் எடுக்கக்கூடும் என்றும் கூறி இப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இருப்பினும் இப்படத்தை இயக்க கங்கனா ரணாவத் உறுதியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கங்கனா ரணாவத் இயக்கி நடித்த மணிகர்ணிகா திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

congress indra gandhi Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe