/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/251_34.jpg)
நடிகையும் பா.ஜ.க. எம்.பி-யுமான கங்கனா ரனாவத், சினிமா பொறுத்தவரை கடைசியாக எமர்ஜென்சி படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது மாதவனுடன் இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது அரசியல் பணியையும் கவனித்து வரும் அவர், ஹிமாச்சல் பிரதேஷ் மண்டி பகுதியில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் தனது இல்லத்துக்கு ரூ.1 லட்சம் முன் கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் பேசியதாவது, “இந்த மாதம் மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் வந்தது, அங்கு நான் வசிக்கவே இல்லை. அங்கு என்ன நடக்குறது என்பதை பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது. இந்த நாட்டையும் மாநிலத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை” என்றார்.
மேலும் ஹிமாச்சல் பிரதேஷை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை ஓநாய்கள் என்றும் அவர்கள் கைகளில் இருந்து மாநிலத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் கூறியுள்ளார். அவர் மண்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)