Skip to main content

"அந்த சம்பவத்திற்கு பின் என் குடும்பமே துயரத்துக்குள்ளானது" - கங்கனா ரணாவத் வேதனை

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

kangana ranaut shared about his sister also faced acid attack

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் அவ்வப்போது அரசியல் குறித்தும் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருவார். அந்த வகையில் டெல்லியில் 20 வயது இளைஞர் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் தொடர்பாக தனது சகோதரிக்கும் இதே போன்று ஆசிட் தாக்குதல் நடந்துள்ளது என கூறியுள்ளார். 

 

இது தொடர்பாக கங்கனா ரணாவத் கூறியது, "நான் டீனேஜ் பருவத்தில் இருக்குபோது, என் சகோதரி ரங்கோலி  ரணாவத் சாலையோரத்தில் ஒரு ரோமியோ ஒருவரால் ஆசிட் வீச்சுக்கு உள்ளானார். அந்தக் தாக்குதலால் என் சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. நினைத்து பார்க்க முடியாத சொல்ல முடியாத, அளவுக்கு அந்த தருணத்தில் என் சகோதரி உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டாள். எனது குடும்பமும் துயரத்துக்குள்ளானது .

 

அந்தச் சம்பவத்துக்குப் பின் பைக்கிலோ காரிலோ அல்லது அந்நியமாக யார் என்னை கடந்து சென்றாலும், என் மீது ஆசிட் வீசி விடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். அந்த பயத்தினால் பல முறை எனது முகத்தை மூடிக்கொள்வேன். இது போன்ற ஆசிட் தாக்குதல் கொடுமைகள் இன்னும் நிற்கவில்லை. அரசு இந்த குற்றங்களுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்